தேனி

உத்தமபாளையம் , சின்னமனூர் பகுதியில் மழை: தீபாவளி வியாபாரம் பாதிப்பு

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ,சின்னமனூர் பகுதியில்  தொடர்மழை  காரணமாக தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
  உத்தமபாளையம் ,சின்னமனூர்,   கம்பம் போன்ற பகுதியில் கடந்த 10 நாள்களாக மழை பெய்து வருகிறது.  காலை
நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பின்னர் மாலை மற்றும் இரவு  நேரங்களில் அவ்வப்போது தொடர்மழை பெய்யும்.
 இந்த மழையால் பெரிய ஜவுளிக்கடை உள்பட  தெருவோரக்  கடைகள்  வரையில் பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள்  தெரிவித்தனர்.  
  இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில்,  செவ்வாய் கிழமை நண்பகல் முதல் மாலை  வரையில் நீடித்த மழையால்  ஒரு சில கடைகளை தவிர  பல  கடைகளில்  கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல்  மழை  குறைந்தால் கடைகளில் பொதுமக்கள் வருகை இருந்தது.
  பெரிய கடைகளில் ஓரளவிற்கு விற்பனை இருந்தாலும் தெருவோரக்கடைகள் மிகவும் பாதிக்கபட்டதாக தெரிவித்தனர்.மழையை பொருட்படுத்தாத  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை  அழைத்துக்கொண்டு பட்டாசு மற்றும் இனிப்புகளை  வாங்கியதாக  தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT