தேனி

சில்வார்பட்டி அரசுப் பள்ளியில் "இன்ட்ராக்ட்' சங்கம் தொடக்கம்

DIN

சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான இன்ட்ராக்ட் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.  
  தேனி ரோட்டரி சங்கத் தலைவர் ராமச்சந்திரன்   முன்னிலையில் மாணவி மோகனப்பிரியா சங்கத் தலைவராகவும், மாணவி நாகலெட்சுமி செயலாளராகவும்,  மாணவர் ஜீவித்குமார்  பொருளாராகவும் 23 பேர் உறுப்பினர்களாகவும் பொறுப்பு ஏற்றனர்.  ரோட்டரி சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழ்க்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இன்ட்ராக்ட் கிளப்பின் செயல்பாடுகள் குறித்து பேசினார். தேவதானப்பட்டி ஆரம்பசுகாதார  மருத்துவர் கோமதி தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி பேசினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்  சுப்பையா, பெருளாளர் ராஜமாணிக்கம் , ரோட்டரி சங்க செயலாளர் அசோகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தமிழாசிரியை தமிழ்செல்வி வரவேற்றார்.  
தலைமையாசிரியர் மோகன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி, சாரணசாரணியர் மற்றும் பசுமைப்படையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT