தேனி

தேனியில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடக்கி வைத்தார்

DIN

தேனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தொடக்கி வைத்தார்.
கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி ரக ஜவுளிகள் 30 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. தேனியில், நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையை தொடக்கி வைத்து ஆட்சியர் பேசுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.2,000 வரை ஜவுளி வாங்குபவர்களுக்கு, கூப்பன் வழங்கப்பட்டு, கூப்பனில் வழங்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மிகச் சரியாக விடையளிக்கும் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.
தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு ரூ.99 லட்சம் மதிப்புக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், கோ-ஆப் டெக்ஸ் மதுரை மண்டல மேலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT