தேனி

தேனியில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை விற்க முயன்றவர் கைது

DIN

கடமலைக்குண்டு அருகே  ஆழந்தளிர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெற்கத்தி கருப்பையா மகன் முருகன் (27).  இவர், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை விற்க முயன்றார். அப்போது முருகன் திருட்டு வாகனத்தை விற்பனை செய்ய வந்திருப்பதாக சந்தேகமடைந்த செல்வராஜ்,  இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், முருகன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இருசக்கர வாகனம் மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த தெய்வம் என்பவருக்குச் சொந்தமானது என்பதும்,  கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த இருசக்கர வாகனம் திருடு போனதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முருகன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT