புறா பிடிக்க கிணற்றில் இறங்கியவர் தவறி விழுந்து சாவு
தேனி மாவட்டம் தேவாரத்தில் புதன்கிழமை, புறா பிடிக்க கிணற்றில் இறங்கியவர் தவறி விழுந்து இறந்தார்.
தேனி மாவட்டம் தேவாரத்தில் புதன்கிழமை, புறா பிடிக்க கிணற்றில் இறங்கியவர் தவறி விழுந்து இறந்தார்.
தேவாரம் திடீர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் போத்திராஜ் மகன் முருகேஸ்வரன் (38). இவர் வளர்த்து வந்த புறா வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் சென்று அமர்ந்து கொண்டது. அதை பிடிப்பதற்காக முருகேஸ்வரன் கிணற்றில் இறங்கியுள்ளார். இதில் தவறி விழுந்த அவர் கிணற்றில் மூழ்கி இறந்தார். உத்தமபாளையம் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து முருகேஸ்வரனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து முருகேஸ்வரனின் மனைவி ராதா அளித்த புகாரின் பேரில் தேவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.