சின்னமனூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 40 பெண் கூலித் தொழிலாளர்கள் காயம்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், 40 பெண் கூலி தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், 40 பெண் கூலி தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கோட்டூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் விக்னேஷ் (20). இவர், சின்னமனூர் அருகேயுள்ள வேப்பம்பட்டியிலிருந்து சீலையம்பட்டியிலுள்ள தனியார் தோட்ட வேலைக்காக 40 பெண்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.
அப்போது, சீலையம்பட்டி செங்குளம் வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் சாலையிலேயே கவிழ்ந்தது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னமனூர் போலீஸார், விபத்தில் பலத்த காயடைந்த ராணி (35), விஜயா, லோகமணி, செல்வி, மயில் உள்பட 10 பெண்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், லேசான காயமடைந்த 35 பேரை சின்னமனூர் அரசு மருத்துமவனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.