தேனி

ஊராட்சிப் பணியாளர்கள் சாலை மறியல்: 220 பேர் கைது

DIN

தேனியில் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், கிராம ஊராட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ.  மாவட்டத் தலைவர் சி. முருகன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் எம். ராமச்சந்திரன், கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாதம் ரூ. 4,750, துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 6,120 சம்பள உயர்வு வழங்க வேண்டும். 
ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 
பணிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.   சாலை மறியலில் ஈடுபட்ட 220 பேரை, தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT