ஆண்டிபட்டியில் குடிநீர் கோரி சாலை மறியல்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி 13-வது வார்டில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து வியாழக்கிழமை காலை தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சக்கம்பட்டியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனே தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலந்து சென்றனர்.
இதனால் ஆண்டிபட்டி - தேனி தேசியநெடுஞ்சாலையில் சுமார் அரைமணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.