பிரதோஷத்தை முன்னிட்டு போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை
பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை போடியில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை போடியில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தென்திருவண்ணாமலை என்றழைக்கப்படும் போடி பரமசிவன் கோயிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவலிங்கத்திற்கு மங்கலப் பொருள்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், அர்ச்சகர் சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.
போடி பிச்சங்கரை மலை கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கீழச்சொக்கையா கோயிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையை முன்னிட்டு சிவபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
போடி வினோபாஜி காலனியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சலிங்கங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேபோல் பழைய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள கொண்டரங்கி மல்லிங்கேசுவரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.