மகளிர் மற்றும் தியாகிகள் தின விழா
பெரியகுளம் அருகே தாமரைக்குத்தில் மகளிர் மற்றும் தியாகிகள் தினம் புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு
பெரியகுளம் அருகே தாமரைக்குத்தில் மகளிர் மற்றும் தியாகிகள் தினம் புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நேருயுவகேந்திரா, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் எ.சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார். நேருயுவகேந்திரா இளையோர் தொண்டர் எஸ்.சரண்யா பண்டியம்மாள் வரவேற்றார்.
மகளிர் திட்ட, சமுதாய அமைப்பாளர் கே.சக்தி வாழ்த்துரை வழங்கினார். ஜெயம் ஸ்ரீ மகளிர் மன்ற நிர்வாகி எஸ்.செல்வி நன்றி கூறினார்.