முகப்பு
தேனி

சிலமலையில் வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து தரக் கோரிக்கை

போடி அருகே சிலமலையில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து

Updated On : 22 மே, 2018 at 12:30 AM
பகிர்:

போடி அருகே சிலமலையில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலர் வைரமுத்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியதாவது:
சிலமலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், சர்வே எண் 472/2 ஏ-ல் உள்ள நிலத்தில் அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை தற்போது வரை வருவாய் துறையினர் முறையாக நில அளவை செய்து உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை.
இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து, அதற்குரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.