தேனி

பெரியகுளத்தில் விதிமீறும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

DIN

பெரியகுளம் பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும்  ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்களால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்சுமார் 200-க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 50-க்கு மேற்பட்ட சரக்குவாகனங்கள்ஆள்களை ஏற்றிச் செல்கின்றன.இந்த வானங்களை ஓட்டுபவர்கள்அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் விதிமுறைகளை மீறி அதிகளவு ஆள்களை ஏற்றி செல்வதாக புகார் எழுந்துள்ளது. 
இத்தகைய வாகனங்களை பேட்ஜ், 
காக்கி நிற சட்டை அணியாமலும், ஒட்டுநர் உரிமம் எண் இன்றி ஓட்டுவதாகவும் சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை 
முந்திச்செல்லுதல்போன்ற பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மற்றும் சரக்குவாகனங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT