தேனி

பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

DIN

போடியில் பிரதோஷத்தை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை  சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட போடி பரமசிவன் கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு மங்கலப் பொருள்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், அர்ச்சகர் சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர். 
போடி பிச்சங்கரை மலை கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கீழச்சொக்கையா கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. போடி வினோபாஜி காலனியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்  சிவபெருமானுக்கு  அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.  
மேலும் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சலிங்கங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முத்தையா, அர்ச்சகர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல்  பழைய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள கொண்டரங்கி மல்லிங்கேசுவரர் கோயிலில் மல்லிங்கேசுவரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அர்ச்சகர் சரவண சாஸ்திரிகள் பூஜை ஏற்பாடுகளை செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT