தேனி

மாட்டு தீவனத்துக்காக ரேஷன் அரிசி கடத்தல்: போடியில் பால் வியாபாரி கைது

DIN

போடியில் மாட்டு தீவனத்திற்காக பால் கேன்களில் ரேஷன் அரிசியை கடத்தியவரை உணவு கடத்தல் தடுப்பு துறையினர்  செவ்வாய்க்கிழமை  கைது செய்தனர்.
போடி பகுதியில் ரேஷன் அரசி கடத்தலை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படை வட்டாட்சியர் ஜாகிர் உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போடி திருவள்ளுவர் சிலை அருகே தேநீர் கடைக்கு வந்த பால் வியாபாரியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து பால் வியாபாரி கொண்டு வந்த பால் கேன்களை சோதனை செய்தனர். 
அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. விசாரணையில் பால் வியாபாரி போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுரேஷ் (39) என்பதும், இவர் பால் மாடுகளை வளர்ப்பதும், பால் வியாபாரம் முடிந்து ரேசன் அரிசியை வாங்கி பால் கேன்களில் பதுக்கி வைத்து அவற்றை வீட்டிற்கு கொண்டு சென்று பால் மாடுகளுக்கு தீவனமாக கொடுந்து வந்ததும் தெரிந்தது. பால் கேன்களில் சுமார் 100 கிலோ ரேசன் அரிசி இருந்துள்ளது.
இதனையடுத்து அவரை பறக்கும்படையினர் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீஸார்  சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரேஷன் அரிசியுடன் கூடிய பால் கேன்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT