தேனி

உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அணை நிரம்பியது

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள சண்முகாநதி நீர்த்தேக்கம் முழுக்கொள்ளளவை எட்டியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே ஹைவேவிஸ் - மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சண்முகாநதி நீர்தேக்கம் 
திங்கள்கிழமை அதிகாலை நிரம்பி அணையிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.  அதேபோல சுருளி அருவியிலும் நீர்வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்: ஆண்டுதோறும் செப்டம்பர் 
அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த நீர்த்தேக்கத்திலிருந்து ஆனைமலையன்பட்டி, பூசாரிகவுண்டன்பட்டி, எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, ஓடைப்பட்டி வரையிலுள்ள 
15 கிராமங்கள் பயன்பெறும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் திறக்கப்படும். 
இந்நிலையில் அணையின் மொத்த உயரமான 52.5 அடியை எட்டியுள்ளதால் நீர்தேக்கத்திலிருந்து 664 ஏக்கர் விவசாய 
நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT