தேனி

திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு: தேனியில் சமூக நலத் துறை இணை இயக்குநர் விசாரணை

DIN


தேனி மாவட்டத்தில் சமூக நலத் துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த புகார் குறித்து சனிக்கிழமை, சமூக நலத் துறை இணை இயக்குநர் ரேவதி விசாரணை நடத்தினார்.
மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக நலத் துறை அலுவலர்கள் மூலம் திருமண நிதி உதவி பெறும் பயனாளிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும், விண்ணப்பங்கள் மீது கள விசாரணை நடத்தவில்லை என்றும், திருமண நிதி உதவி உரிய பயனாளிகளை சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் விசாரணை நடத்தினார்.
இதனிடையே, மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள் விடுப்பில் சென்றதால், மதுரை மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி தேனி மாவட்ட சமூக நல அலுவலராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், சமூக நலத் துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் திருமண உதவித் தொகை உரிய பயனாளிகளுக்கு கிடைத்தது குறித்தும், திருமண நிதி உதவித் திட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில், பயனாளிகளை நேரில் சந்தித்து சமூக நலத் துறை இணை இயக்குநர் ரேவதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT