தேனி

தேனி அருகே மிதி வண்டி மீது லாரி மோதி பேக்கரி தொழிலாளி சாவு

DIN


தேனி அருகே சனிக்கிழமை மூன்று சக்கர மிதி வண்டி மீது லாரி மோதியதில், பேக்கரி தொழிலாளி உயிரிழந்தார்.
வலையபட்டியைச் சேர்ந்தவர் ராமர் மகன் பாலமுருகன் (38). இவர், மூன்று சக்கர மிதி வண்டியில் பேக்கரி பொருள்களை கொண்டு சென்று விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், முத்துத்தேவன்பட்டியில் இருந்து உப்புக்கோட்டைக்கு மூன்று சக்கர மிதி
வண்டியில் பேக்கரி பொருள்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பாலமுருகன் மீது, களஞ்சியம் என்ற இடத்தில் உப்புக்கோட்டை நோக்கி வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து டிப்பர் லாரி ஓட்டுநர் வெங்கடாச்சலபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தகுமரர்(32) என்பவரை கைது செய்தனர்.
பொதுமக்கள் மறியல்: டிப்பர் லாரி அதிவேகமாக வந்து மூன்று சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது லாரியின் உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து
கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT