தேனி

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN


நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாமல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது.  கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் அணைக்கு விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.20 அடியாக இருந்தது. கொள்ளளவு 1,279 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 100 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது. 
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழையளவு (மி.மீட்டரில்): பெரியாறு அணை-  2.6, தேக்கடி ஏரி - 5.6, கூடலூர் - 53, உத்தமபாளையம் - 31.6, வீரபாண்டி - 37 மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT