தேனி

தேனி மாவட்டத்தில் சராசரி 70.8 மி.மீ. மழை பதிவு

DIN

தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சராசரி 70.8 மி.மீ., மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த ஆக.7-ம் தேதி முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையாலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கொட்டகுடி மற்றும் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளது. 
  வீரபாண்டியில் வெள்ளிக்கிழமை அதிக அளவாக 61 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆண்டிபட்டியில் 29 மி.மீ.,  அரண்மனைப்புதூரில் 55.8, போடியில் 44.2, பெரியகுளத்தில் 29, மஞ்சளாறு அணை நீர்பிடிப்பில் 21, சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பில் 37, வைகை அணை நீர்பிடிப்பில் 27, உத்தமபாளையத்தில் 57.1, கூடலூரில் 53 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
  முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் 200.6 மி.மீ., தேக்கடியில் 235 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT