தேனி

திருச்சியில் வேன் ஓட்டுநர் மர்மச் சாவு

DIN

திருச்சியில் தேனியைச் சேர்ந்தவர் மர்ம மரணமடைந்தது குறித்து கண்டோன்மென்ட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தேனி மாவட்டம், கண்டமனூர் வட்டம் கோவிந்த நகரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ரவிக்குமார் (28). இவர், தனியார் செல்லிடப்பேசி நிறுவன விளம்பரப் பிரிவில் வேன் ஓட்டுநராக உள்ளார். 
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக திருச்சி வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரெனால்ட்ஸ் சாலையில் வேனில் தூங்கினார். திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வேன்  கதவு திறக்காமல் இருப்பதைக் கண்ட சக ஊழியர் கண்டோன்மென்ட் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் போலீஸார் வேன் கதவைத் திறந்து பார்த்தபோது ரவிக்குமார் இறந்துகிடந்தது தெரியவந்தது. ரவிக்குமார் உடலை மீட்ட போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து வேன் ஓட்டுநர் ரவிக்குமார் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT