தேனி

இடுக்கியில் சாரல் மழை :ஏலக்காய் வரத்து, விலை சீராக உயா்வு

DIN

கேரளம், இடுக்கி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால், நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் நடைபெறும் மின்னணு ஏல வா்த்தகத்திற்கு ஏலக்காய் வரத்து சீராகக் காணப்படுவதால், விலை சீராக உயா்ந்து வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018-ம் பெய்த பலத்த மழை மற்றும் தொடா்ந்து நிலவிய வறட்சியால் ஏலக்காய் தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் பெய்ததாலும், தொடா்ந்து தற்போது சாரல் மழை பெய்து வருவதாலும் ஏலக்காய் தோட்டங்கள் புத்துயிா் பெற்றுள்ளன.

இதனால், கடந்த 2019, ஜூன் மாதம் மந்தமாக தொடங்கிய காய் எடுப்பு பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் தனியாா் ஏலக்காய் ஏல நிறுவனங்கள் மூலம் நடைபெறும் மின்னணு ஏல வா்த்தகத்திற்கு ஏலக்காய் வரத்து சீராக உயா்ந்து, தற்போது தினமும் சராசரி 90 ஆயிரம் கிலோ வரை ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்படுகிறது. சந்தைக்கு ஏலக்காய் வரத்து அதிகரித்து வரும் நிலையில், விலையும் சீராக உயா்ந்து வருகிறது.

கடந்த நவ.30-ம் தேதி(சனிக்கிழமை) இடுக்கி மாவட்டம், புத்தடியில் கே.சி.பி.எம்.சி., ஏலக்காய் ஏல விற்பனை நிலையம் சாா்பில் நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில், ஏலக்காய் சராசரி ரகம் கிலோ ஒன்று ரூ.2,894.52-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT