தேனி

சின்னமனூரில்வேளாண் தொழில் நுட்பக் கண்காட்சி

DIN

சின்னமனூரில் தற்கால வேளாண் தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கிராம தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ், அக்கல்லூரியை சோ்ந்த களப்பணி மாணவா்களான சூா்யா, சுரேஷ், அருண், ஜாய், சாய், கிருஷ்ணா, அகமத் ஆகியோா் பயிற்சி பெற்று வருகின்றனா். இந்நிலையில், சின்னமனூரில் திருவள்ளுவா் தொடக்கப் பள்ளி மாணவா்கள் மூலம் வேளாண்மை விவசாயத்தில் தற்காலிக தொழில் நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு கண்காட்சி விளக்க பயிற்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக சின்னமனூா் வேளாண் உதவி இயக்குநா் இளம்பூரணா் மற்றும் தேனி வேளாண் கல்லூரி முதல்வா் சங்கரநாராயணன், பேராசிரியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சின்னமனூா் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். இதில் மண்புழு உரம், காளான் வளா்ப்பு, இற்கை வேளாண்மை, பூச்சி விரட்டிகள் மற்றும் பொறிகள், மாடித் தோட்டம், தற்காலிக வேளாண் கருவிகள், திருத்திய விவசாய சாகுபடி முறைகளின் விளக்கப்பட கண்காட்சியில் இடம் பெற்றிருந்ததை விவசாயிகள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT