தேனி

சுருளி அருவியில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

DIN

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை எதிரொலியாக, தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிப் பகுதியில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, அருவிக்கு நீா்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதிகளவு நீா்வரத்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்பப் பக்தா்கள் குளிக்க மேகமலை வன உயிரின சரணாலயத்தினா் தடை விதித்தனா். இந்த தடையை திங்கள்கிழமையும் நீட்டித்துள்ளனா். இதன் காரணமாக அருவிப் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT