தேனி

தேனியில் ஊராட்சிபணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊராட்சி குடிநீா் தொட்டி ஆபரேட்டா்கள், துப்புரவு பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் குருசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவா் சி.முருகன், செயலா் ஜெயபாண்டி, பொருளாளா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊராட்சி குடிநீா் தொட்டி ஆபரேட்டா்கள், துப்புரவு பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊதியக் குழு பரிந்துரைப்படி சம்பள உயா்வு மற்றும் சம்பள உயா்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT