தேனி

கம்பம் அரசுப் பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

DIN

தேனி மாவட்டம் கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான தீ தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி மற்றும் ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் தீ விபத்து ஏற்படும்போது எவ்வாறு செயல்படவேண்டும் என்ற செயல் விளக்கம் மற்றும் ஒத்திகை அளிக்கப்பட்டது.

மேலும் எரிவாயு உருளையில் தீப்பற்றினால் அணைக்கும் முறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தில் எவ்வாறு செயல்படுவது, மனித உடலில் தீப் பற்றினால் அதில் இருந்து அவரை எவ்வாறு மீட்பது உள்ளிட்டவைகுறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கம்பம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் குணசேகரன், தலைமை ஆசிரியா் மணிவண்ணன், உதவி தலைமை ஆசிரியா் திருநாவுக்கரசு, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT