தேனி

போடி அருகே பள்ளிக் கட்டடத்தில் தீ விபத்து

DIN

போடி அருகே பயன்பாடற்ற பள்ளிக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. 
போடியை அடுத்துள்ள நாகலாபுரம் ஊராட்சியில் தனியார் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்குச் சொந்தமான பயன்பாடில்லாத கட்டடத்தில் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்த தகவலின்பேரில், போடி தீயணைப்பு நிலைய தலைமை அலுவலர் அப்துல் கலாம் ஆசாத் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், கட்டடத்தின் மேற்கூரை தகரங்கள், மேஜை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திறந்தவெளியில் கட்டடம் இருப்பதால், யாரேனும் பீடி, சிகரெட் குடித்துவிட்டு வீசிவிட்டுச் சென்றதே, இந்த தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT