தேனி

கம்பத்தில் இரும்பு வியாபாரியிடம்  நூதன முறையில் ரூ.15 ஆயிரம் மோசடி

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை இரும்பு வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.15 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கம்பம் அருகே அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த  அழகுராஜா பழைய இரும்பு பொருள்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை கடைக்கு வந்த மர்மநபர் கம்பம் நகராட்சியில் பழைய இரும்பு பொருள்களை மலிவான விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். 
அதை நம்பிய அழகுராஜா அவருடன் கம்பம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு பொருள்களை காண்பித்து மர்மநபர் விலை பேசியுள்ளார்.  பின்னர் அழகுராஜாவிடம் ரூ.15 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு, ஆணையாளர் அறை அருகே அவரை அமர வைத்து விட்டு மர்மநபர் மாயமானார்.
வெகு நேரமாகியும் மர்மநபர் வராததால், அங்கிருந்த நகராட்சி அலுவலர்களிடம் அழகுராஜா விசாரித்த போதுதான் தன்னை மர்மநபர் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து அழகுராஜா அளித்தப் புகாரின் பேரில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT