தேனி

பொங்கல்: கருப்பு தினமாக அனுசரித்த விசைத்தறி ஒப்பந்தத் தொழிலாளர்கள்

DIN

ஆண்டிபட்டியில் கூலி ஒயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தாததால் பொங்கல் பண்டிகையை விசைத்தறி ஒப்பந்தத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை கருப்பு தினமாக அனுசரித்தனர். மேலும் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைதறி தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நெசவாளர்களுக்கு கூலிஉயர்வு ஒப்பந்தம் கடந்த 2018 டிசம்பர்31 உடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய கூலிஉயர்வு கேட்டு ஆலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தது. இதனையடுத்து 50 சதவிகிதம் கூலிஉயர்வு வழங்குவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதில் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் நெசவுத் தொழிலாளர்களுக்கு 19 சதிவிகிதம் கூலி உயர்வு வழங்குவதாக உரிமையாளர்கள் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொங்கலுக்கு முன்பே பணிக்கு திரும்பிவிட்டனர். ஆனால் ஒப்பந்தம் அடிப்படையில் ஜவுளி உற்பத்தி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் உரிமையாளர்களுக்குமான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. இதனால் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. 
இந்நிலையில் பொங்கல் திருநாளை கருப்பு தினமாக கொண்டாடுவதாக அறிவித்தனர். இதனையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது சட்டைபையில் கருப்பு துணியை அணிந்து தங்களது உரிமையாளர்களுக்கு  எதிர்பை தெரிவித்தனர்.மேலும் விரைவில் தங்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் போட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT