தேனி

கம்பத்தில் இளைஞரை தாக்கியதாக 2 பேர் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கி காயப்படுத்தியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்தவர் போதுராஜ் மகன் அஜித்குமார் (23). பால் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் தவமணி மகன் ராஜ்குமார் (24), தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்தவர் தெய்வம் மகன் விஜய் (19), அன்னக்கொடி மகன் தென்னரசு. 
கட்டட  வேலை செய்து வரும் இவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு பரவு காவல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் அஜித்குமார் நின்று கொண்டிருந்துள்ளார்.
அஜித்குமாருக்கும், ராஜ்குமார், விஜய், தென்னரசு ஆகிய மூவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததால், அவர்கள் மூவரும் அஜித்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பு, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். 
இதில் காயமடைந்த அஜித்குமார் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் ராஜ்குமார், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து, தலைமறைவாகியுள்ள தென்னரசுவை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT