தேனி

தேனியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு

DIN

தேனி மாவட்டத்தில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்கள் தங்கள் கோரிக்கை குறித்து ஆட்சியரிடம் முறையிட பலமுறை முயன்றும் முடியாததால் அவர்கள் வரும் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளாகி துறை ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களிடையே வரவேற்பை பெற்றார். இவரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை கூற தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவுடன் பல முறை முயன்று, ஆட்சியர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சத்துணவு பணியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இது பற்றி மாநில நிர்வாகி பேயத்தேவன் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றது முதல் இன்று வரை சந்திக்க முடியவில்லை. பலமுறை முயன்றும் நேரம் ஒதுக்காததால் சத்துணவு பணியாளர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். வரும் செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

SCROLL FOR NEXT