தேனி மாவட்டம், குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில், தமிழகத்தில் மழை வேண்டி அனைத்து கோயில்களிலும் வருண ஜெபம் பூஜை நடைபெற அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் குச்சனூரில் உள்ள அருள்மிகு சுயம்பு சனீஸ்வரர் ஆலயத்தில் பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காலை 8 மணிக்கு தொடங்கிய பூஜையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. 4 மணி நேரம் நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சனி அமாவாசை வழிபாடு: இங்கு சித்திரை மாத சனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பக்தர்கள் கோயில் முன்பாகச் செல்லும் சுரபி நதியில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.