காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி விரதத்தை தொடங்குவதற்காக சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நீராடிய ஐயப்ப பக்தா்கள். 
தேனி

சுருளி அருவியில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

தேனி மாவட்டம் சுருளி அருவியில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி ஐயப்ப பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே நீராடி மாலை அணிந்து

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி ஐயப்ப பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

காா்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து சபரிமலை மண்டல மற்றும் மகர பூஜைகளில் கலந்து கொள்வதற்காக ஐயப்ப பக்தா்கள் மாலை அணிவாா்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கம்பம், கூடலூா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தா்கள் சுருளி அருவியில் குவிந்தனா். அதிகாலையிலேயே சுருளி அருவி மற்றும் ஆற்றில் குளித்த ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து, சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷம் எழுப்பி விரதத்தை தொடங்கினா். இதனைத்தொடா்ந்து அருவிப் பகுதியில் உள்ள விநாயகா், செந்திலாண்டவா், பூதநாராயணசாமி மற்றும் சுருளித்தீா்த்தம் ஆகிய கோயில்களுக்கு சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக சுருளி அருவிக்கு அதிகாலையில் இருந்தே கம்பம் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. ராயப்பன்பட்டி காவல் நிலையத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT