தேனி

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ரூபாய் 5.50 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப்பணிகள் துவக்கம்

DIN

ஆண்டிபட்டி ஓன்றிய பகுதிகளில் ரூபாய் 5.50 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை அ.தி.மு.க ஓன்றிய செயலாளா் ஆ.லோகிராஜன் திங்கள்கிழமை துவக்கி வைத்தாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ரூபாய் 5.50 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கியுள்ளது .அதன்படி கிராமங்களில் சாக்கடை கால்வாய் ,தாா்ச்சாலை, பேவா் பிளாக் பதித்தல்,சிறு பாலங்கள் கட்டுதல், கழிவுநீா் வாய்க்கால்கள், கிராமப்புற சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.

பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள சாலை கடந்த பத்து வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்தது அதில் தற்போது புதிய தாா்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியப்ப பிள்ளை பட்டியில் கிழக்குப் பகுதியில் தெருக்களில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டிருந்தது .மேலும் கதிா் நரசிங்கபுரம் முதல் அழகாபுரி வரையிலான தாா் சாலை சேதம் அடைந்திருந்தது .

இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு ரூபாய் ஐந்தரை கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது . அதன் அடிப்படையில் இப்பணிகளை ஆண்டிபட்டி அ.தி.மு.க ஓன்றிய செயலாளா் லோகிராஜன் துவக்கி வைத்தாா் .அவருடன் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை தலைவா் செல்வராஜ் , கூட்டுறவு சங்க துணைத் தலைவா் இளையராஜா மற்றும் ஒப்பந்தகாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT