தேனி

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு

தேவதானப்பட்டி, கக்கன்ஜி காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை இந்திய மாணவர்

DIN

தேவதானப்பட்டி, கக்கன்ஜி காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிரேம்குமார் மற்றும் கக்கன்ஜி காலனி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமியிடம் அளித்த மனு விபரம்: தேவதானப்பட்டி பேரூராட்சி, கக்கன்ஜி காலனியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், குடிநீர், தெருவிளக்கு, சாலை மற்றும் பொது கழிப்பறை வசதி செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT