தேனி

சுரங்கனாறு நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பு அணை அமைக்க அதிகாரிகள் ஆய்வு

DIN

தேனி மாவட்டம், கூடலூர் மேற்கு பகுதியில் உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சி அருகே தடுப்பு அணை கட்ட விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அதிகாரிகள் அந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
       கூடலூர் மேற்கு பகுதியில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் 8-ஆம் மைல் அருகே ஓடும் சுரங்கனாறு, மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கூடலூர் பகுதியில் விழுந்து ஒட்டான்குளத்தை அடைகிறது. 
  மழைக் காலங்களில் இக்குளம் நிரம்பி, நன்செய் பாசனத்துக்கு பயன்பட்டு வந்தது. 
      இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பலத்த மழையால் நீர்வீழ்ச்சியின் வழித்தடம் மாறி, முல்லைப் பெரியாற்றில் கலந்ததால், குளத்து பாசனத்தை நம்பிய விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள், தடுப்பணைக் கட்டி சுரங்கனாறு தண்ணீரை ஒட்டான்குளத்துக்கு திருப்பிவிட கோரிக்கை விடுத்தனர்.
      அதனை ஏற்று, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் அதிகாரிகளிடம் இடத்தைப் பார்வையிட்டு, ஆய்வு நடத்த உத்தரவிட்டார். 
  அதன்பேரில், செவ்வாய்க்கிழமை உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி, பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் ந. அன்புச்செல்வன், கம்பம் மேற்கு வனச்சரகர் அன்பு  ஆகியோர், சுரங்கனாறு தண்ணீர் தேங்கும் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
     பின்னர், பொதுப்பணித் துறை பொறியாளர், மாவட்ட ஆட்சியரிடம் ஆய்வு முடிவுகள் ஒப்படைக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது, விவசாயிகளும் உடன் சென்றிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT