தேனி

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி

DIN


 போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி சார்பில் உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி போடி நகராட்சி முன்பாக வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது.
கல்லூரி துணைத்தலைவர் பி.வி.கருப்பையா தலைமை வகித்தார். போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் வி.வெங்கடாசலபதி பேரணியை தொடங்கி வைத்துப் பேசினார். காலநிலை மாற்றம் குறித்தும் அதனால் ஏற்படப் போகும் பேரழிவுகள் குறித்தும் பேராசிரியர் எஸ்.சத்தியராஜ் விளக்கி பேசினார். பேரணியின் முக்கியத்துவம் பற்றி யூகோ கிளப் ஒருங்கிணைப்பாளர் சி.கோபி விளக்கினார். 
பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பங்கேற்று நடந்தும், சைக்கிள் மூலமும் கல்லூரிக்கு சென்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் டி.ராஜகுமாரன் வரவேற்றார்.
 ஏற்பாடுகளை கல்லூரி யூகோ கிளப், நாட்டு நலப் பணித்திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். நிறைவில் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.மாணிக்கராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT