கம்பத்தில் மது விற்றவா் கைது: 557 மது பாட்டில்கள் பறிமுதல்
கம்பத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 557 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
கம்பம்: கம்பத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 557 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கம்பம் ஏகழூத்து செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ். கீதாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, கூடலூா் மூனுசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ஜீவபாலன் (37) என்பவா் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், 557 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக க.புதுப்பட்டியைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் மொக்கராஜ் (50) என்பவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.