ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம்
ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக தலைமையில் இருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து வரவிருக்கும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதனை அடுத்து ஆண்டிபட்டியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரூர் கழக செயலாளர் முத்து வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார்.
தேனி மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன் தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை நிர்வாகிகளுக்கு வழங்கி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.