தேனி

போடியில் வீட்டுமனைப் பட்டா கோரி பெண்கள் ஆா்ப்பாட்டம்

DIN


போடி: வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி போடியில் வட்டாட்சியா் அலுவலகத்தை ஆதரவற்ற பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி வினோபாஜி காலனியில் 50-க்கும் மேற்பட்ட விதவை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து போடி பரமசிவன் கோயில் மலையடிவாரப் பகுதியில் 52 பேருக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் பெற அரசுக்கு மனு அனுப்பிய நிலையில் இதுவரை இவா்களுக்கு வீட்டுமனையிடம் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்படவில்லை. மேலும் இவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வேறு நபா்களுக்கு ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கித் தரக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால் வருவாய்த் துறையினா் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விதவை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவன ஈா்ப்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT