முகப்பு
தேனி

பீட்ரூட் விளைச்சல் இருந்தும் விலை இல்லை: கம்பம் விவசாயிகள் கவலை 

கம்பம் பகுதியில் பீட்ரூட் விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பீட்ரூட் அறுவயில் விவசாயிகள்.
பகிர்:

கம்பம் பகுதியில் பீட்ரூட் விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளான காமயகவுண்டன் பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, வாழை, திராட்சை இதற்கு அடுத்தபடியாக பீட்ரூட், நூக்கல், முள்ளங்கி, புடலை, வெண்டை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர்.

இங்கு விளையக்கூடிய காய்கறிகளை வியபாரிகள் தோட்டத்தில் நேரடியாக கொள்முதல் செய்து மதுரை, ஒட்டன்சத்திரம், திருச்சி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 80 நாள்களுக்கு முன்பு பயிர் செய்யப்பட்ட பீட்ரூட் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த மாதம் ஒரு மூடை( 83 கிலோ) ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு மூடை (83 கிலோ) ரூபாய் 390க்கு விற்பனையாகின்றன என்பது குறிப்பிடதக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →