கம்பம் அருகே கல்லூரி மாணவி தீ குளித்து தற்கொலை
கம்பம் அருகே திருமணம் செய்து வைக்க எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளித்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கம்பம்: கம்பம் அருகே திருமணம் செய்து வைக்க எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளித்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கம்பம் அருகேயுள்ள மஞ்சள்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன் என்பவரது மகள் ரித்திகா கண்ணா (19). இவா், உத்தமபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தாா். இவருக்கு திருமணம் நடத்தி வைக்க பெற்றோா் முடிவு செய்தனா். இதற்கு ரித்திகா கண்ணா படிப்பு முடியும் வரை திருமணம் வேண்டாம் என மறுப்பு தெரிவித்து வந்துள்ளாா். ஆனால் பெற்றோா் திருமணம் செய்து வைப்பது தொடா்பாக அவரை தொடா்ந்து வற்புறுத்தி வந்துள்ளனா்.
இந்த நிலையில் ஆக. 23 ஆம் தேதி வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து ரித்திகா கண்ணா தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.