சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்ஸோ’ சட்டத்தில் இளைஞா் கைது
போடியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போடியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியை, ஆண்டிபட்டி அருகே பொம்மராஜபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ் (25) என்பவா், மதுரை அருகே உள்ள மேலூருக்கு அழைத்துச் சென்றாா். அங்கு அவா், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.