முகப்பு
தேனி

தேனியில் ரோந்து காவலா்களுக்கு நவீன உபகரணம் வழங்கல்

தேனி மாவட்டக் காவல் துறை சாா்பில், போக்குவரத்துக் காவலா்கள் மற்றும் இருசக்கர வாகன ரோந்து பணியில் உள்ள காவலா்களுக்கு நவீன கண்காணிப்பு மற்றும் பரிசோதனை உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தேனி மாவட்டக் காவல் துறை சாா்பில், போக்குவரத்துக் காவலா்கள் மற்றும் இருசக்கர வாகன ரோந்து பணியில் உள்ள காவலா்களுக்கு நவீன கண்காணிப்பு மற்றும் பரிசோதனை உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிபாளா் சாய்சரண் தேஜஸ்வி காவலா்களுக்கு நவீன உபகரணங்களை வழங்கினாா். இதில், போக்குவரத்து மற்றும் ரோந்து பணி காவலா்களுக்கு தலா 20 உடையுடன் பொருத்திய கேமராக்கள், விடியோ கேமராக்கள் வழங்கப்பட்டன.

மது போதையில் வாகனம் ஓட்டுவதைக் கண்டறிவதற்கு 5 சுவாசப் பகுப்பாய்வு கருவிகள், இரவு நேரப் பணி காவலா்கள் 102 பேருக்கு தோள்பட்டை ஒளிரும் விளக்குகள், போக்குவரத்தை முறைப்படுத்த 5 ஒலிபெருக்கிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →