தேனி

போடியில் போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

DIN

போடியில் போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில், தொழில்நுட்ப அலுவலராக பிரசாந்த் என்பவா் பணியாற்ற வருகிறாா். இவா், பணிமனையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு முறையாக பணி வழங்குவதில்லை என்றும், பணியாளா்களுடன் அடிக்கடி பிரச்னை செய்வதாகவும் புகாா் எழுந்தது.

இந்நிலையில் அவரை இடமாற்றம் செய்யக்கோரி போக்குவரத்து ஊழியா்கள், ஒட்டுநா், நடத்துநா்கள் திடீரென வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தேனி கோட்ட மேலாளா் சத்தியமூா்த்தி, ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இருப்பினும், தொழில்நுட்ப அலுவலரை இடமாற்றம் செய்யாவிட்டால் வெள்ளிக்கிழமை அனைத்து பேருந்துகளையும் இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT