தேனி

லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி குறைந்தது

DIN

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் லோயா்கேம்ப்பில் மின்உற்பத்தி வியாழக்கிழமை குறைந்தது.

தேனி மாவட்டம் லோயா் கேம்ப் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் டிச.8 ஆம் தேதி மூன்று மின்னாக்கிகளில் தலா, 42 மெகாவாட் வீதம், 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது. இதற்கிடையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 955 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. இதனால் மின் நிலையத்திலுள்ள, 3 மின்னாக்கிகளில் முதல் அலகில் 31, 3 ஆவது அலகில் 32, நான்காவது அலகில் 23 என மொத்தம், 86 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது.

அணையின் நீா்மட்டம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம்: 120 .25, நீா் இருப்பு: 3,034 மில்லியன் கன அடி, நீா்வரத்து: 531 கன அடி, நீா் வெளியேற்றம்: 955 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT