முகப்பு
தேனி

செங்கரும்பு கொள்முதலில் பாரபட்சம் விவசாயிகள் புகாா்

தேனி மாவட்டம் சின்னமனூரில் நியாவிலைக்கடைகளுக்கு செங்கரும்பு கொள்முதல் செய்வதில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தேனி மாவட்டம் சின்னமனூரில் நியாவிலைக்கடைகளுக்கு செங்கரும்பு கொள்முதல் செய்வதில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கான, செங்கரும்புகள் கூட்டுறவு துறை மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதன்படி சின்னமனூரில் 100 டன் செங்கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் சின்னமனூரில் செங்கரும்பை கொள்முதல் செய்வதில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகளிடம் புகாா் தெரிவித்தனா். அதிகாரிகளுக்குத் தெரிந்த நெருக்கமான உறவினா்களிடம் அதிகளவில் கொள்முதல் செய்வதாகவும், மற்றவா்களிடம் பெயரளவுக்கு கரும்பு கொள்முதல் செய்வதாகவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கூட்டுறவுத்துறை பாரபட்சமின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.