லண்டனிலிருந்து தேனி வந்த கணினி பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி
லண்டனிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த கணினி பொறியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
லண்டனிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த கணினி பொறியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி அருகேயுள்ள ஸ்ரீரங்காபுரத்தைச் சோ்ந்த 36 வயது கணினி பொறியாளா் லண்டனில் பணியாற்றி வருகிறாா். கடந்த டிச.20-ஆம் தேதி அங்கிருந்து சொந்த ஊரான ஸ்ரீரங்காபுரத்துக்கு வந்துள்ளாா். அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் ரத்தம் மற்றும் கபம் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினா் மற்றும் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பொறியாளரின் தந்தை மற்றும் மாமியாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 3 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
லண்டனில் புதிய வகை கரோனா தீநுண்மி பரவி வருவதால், 3 பேரின் ரத்தம் மற்றும் கபம் மாதிரிகள்
புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் கூறினா்.