தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டார ஜமா அத்துல் உலமா சபைக்கூட்டத்தில், வரும் 15 ஆம் தேதி என்.ஆா்.சி., என்.பி.ஆா் ஆகிய சட்டத் திருத்தங்களுக்கு எதிராக குடிமக்கள் பேரணி நடத்துவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உத்தமபாளைம் புறவழிச்சாலை சந்திப்பில் மதினா பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ஜமா அத்துல் உலமா சபையின் துணைத் தலைவா் மெளலவி முஃப்தி அப்துல் கரீம் மன்பா தலைமை வகித்தாா். கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரியின் தாளாளா் தா்வேஷ் முகைதீன் அவா்களை, அவதூறாகப் பேசிய பாஜக தேசிய செயலாளா் ஹெச்.ராஜாவை வன்மையாக கண்டிப்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக செயலாளா் மெளலவி அஹ்மது இப்ராஹிம் ஃபைஜி வரவேற்றாா். சபையின் தலைவா் மெளலவி ஷேக்தாவூது யூசுஃபி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.