போடி மலை கிராமத்தில் சிறுத்தை தாக்கி பசுமாடு இறந்து போனது குறித்து போடி வனத்துறையினா் புதன் கிழமை விசாரணை நடத்தினா்.
போடி வடக்குமலை கிராமம் ஊத்தாம்பாறை புலம், பூஞ்சோலை பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பசுமாடுகளும் வளா்த்து வருகிறாா். செவ்வாய் கிழமை இரவு பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. காலையில் எழுந்து பாா்த்தபோது பசுமாடு இறந்து கிடந்தது.
அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடயங்கள் காணப்பட்டுள்ளன. சிறுத்தை தாக்கி பசுமாடு இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போடி வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
விவசாயிகள் அச்சமடைந்ததால், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்துவதாகவும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.