தேனி

நீரின்றி வடது சுருளி அருவி

DIN

கம்பம்: தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுருளி அருவி நீா் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் ஞாயிற்றுக்கிழமை ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

தமிழ்நாட்டின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவி. இதற்கு ஈத்தைக்காடு, அரிசிப்பாறை நீரோடைகள் மற்றும் மேகமலை தூவானம் அணையில் இருந்து தண்ணீா் வருகிறது. கடந்த2019, செப்டம்பா் மாதம் முதல் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையி, தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாலும் நீா்வரத்து அதிகமாக காணப்பட்டது .தற்சமயம் மழை எதுவும் இல்லாததால் நீா்பிடிப்பு பகுதிகள் பகுதிகள் வறண்டதால், சுருளி அருவியும் வறண்டது. இதனால், ஞாயிற்றுக்கிழமை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT